Thursday, August 11, 2005

பார(தீ)!!!!!!!!!!!!!!!!!!!

எறக்குறய பத்து வருடங்களிற்குப் பிறகு தமிழில் எழுதுகிறேன். பிழையிருப்பின்
பொருத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

இரண்டு மூன்று வயதில் தமிழ் எழுதுக்கள் கற்றுக்கொடுத்த அம்மா, எனக்கு முதலில்
அறிமுகப்படுதியது பாரதியை. அவர் சொல்லிக் கொடுத்தபடி "அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பது இல்லையே" மேடையேறி பாடியது இன்றும் என் மனதில் நிற்கிறது. அதற்கு
பரிசாகப் பெற்றது பாரதியார் கவிதைகள் புத்தகம். பொழுது போகாத வேளைகளில்,
அதை படிக்க ஆரம்பித்த நான், மிக விரைவில் அவரின் எழுத்துக்கு அடிமை ஆனேன்.
என்ன அழகான தூய்மையான சிந்தனை. என்ன வேகம் அவர் வார்த்தைகளில். என்ன
தீர்கதரிசனம் அவர் பாக்களில். படிப்பவர் கண்களில் சில நேரம் நீர்துளி, சில நேரம்
தீப்பொறி...

"அக்கினிக் குஞ்ஞொன்று கண்டேன்
அதை ஆங்கினோர் பொந்தினில் வைத்தேன்.
வெந்து தணிந்தன காடு
தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்"

நான்கே வரி. ஆனால் எத்தனை உண்மை அதனுள். எத்தனை வேகம். மெய்சிலிற்கிறது.
இக்கவிதை படித்தவுடன் எனக்கு கம்ப இராமாயணத்தில் ஒரு இடம் ஞாபகம் வருகிறது.
அனுமார் அசோகவனத்தில் சீதையை கண்டுவிட்டு இராமரிடத்தில் சேதி சொல்ல வரும்
இடம். இராமருக்கு கவலை வேண்டாமென்று இரண்டே வார்த்தையில் சேதி சொல்லுவார் -
"கண்டேன் சீதையை". இங்கு கவனித்தால் கம்பர் 'கண்டேன்' சொல்லை சீதைக்கு முன்
புகுத்தியிருப்பார். இரண்டே வார்தையில் எவ்வளவு வண்மை.

இன்னும் சில...

"நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடீ சிவசக்தி எனை சுடர்மிகும்
அறிவுடன் படைத்து விட்டாய்"

"உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்"

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்"
என்று எழுதிவிட்டு அதே பாவில்
"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்"

என்றும் பாடுகிறார்.
இப்படி ஏராளம்...இது பாரதி பற்றி எனது முதல் தொகுப்பு...நான் படித்த பல பாடல்கள்
நினைவில் சரியாக இல்லை இப்போது.... சற்று நாளாகும். என் பாரதி தொகுப்பு இன்னும்
வளரும்.

5 Comments:

Blogger mathangi k said...

nandri.

I will be periodically sharing my ode to Bharathi here....

:)
Mathangi

10:20 PM  
Blogger Agnibarathi said...

சொல்லுக்கு ஒரு கவிஞன் பாரதி என்று சும்மாவா சொன்னார்கள்? நேற்று Incidentally, விஜய் TVஇல் பாரதி படம் பார்த்தேன்... நான் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி நின்ற முதல் படம்!! பாரதி பற்றி உங்கள் புதிய பதிவுகளை எதிர்ப்பார்க்கிறேன்

10:11 PM  
Blogger P B said...

அஹா,
பாரதி பற்றி நிறைய எழுதவும். நிறைய எதிர்பார்க்கிறேன்.

-P B

7:26 AM  
Anonymous Anonymous said...

ungalin bharathi pathipugal migavum arumai.yaen thamizhil yezhuthuvathai niruthiviteergal.ungal yehuthil azhgana siriya agni pori irukintrathu.thodaravum---3As

2:25 AM  
Anonymous Anonymous said...

ur post on bharathi reflected all my thoughts and ideas abt the great bard... good one... keep it up!

4:09 AM  

Post a Comment

<< Home